Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை ராமாபுரம் மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து ! அப்பளமாய் நொறுங்கிய அரசு பஸ்,...

    சென்னை ராமாபுரம் மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து ! அப்பளமாய் நொறுங்கிய அரசு பஸ், லாரி!

    ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் பேருந்துகளின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. 

    குன்றத்தூரில் இருந்து இன்று காலை TN01N5450 என்ற அரசு பேருந்து ஆலந்தூர் நோக்கி கிளம்பிச் சென்றது. மேலும், இந்த பேருந்தில் அரசு பணியாளர்கள் பயணித்துள்ளனர். 

    இந்த பேருந்து ராமாபுரம் அருகில் சென்றுக் கொண்டிருக்கும் போது, மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் அங்கு வந்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீதும், அதனருகில் வந்துக்கொண்டிருந்த லாரியின் மீதும் விழுந்தது. இதனால் பேருந்து முற்றிலும் நாசமாகியது. மேலும், லாரியும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியது. 

    இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....