Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஹீரோயினாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்! அதுவும் முதல் படத்திலேயே சூப்பர் ஹீரோ மகனுக்கு ஜோடியாக...

    ஹீரோயினாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்! அதுவும் முதல் படத்திலேயே சூப்பர் ஹீரோ மகனுக்கு ஜோடியாக…

    நடிகை ரோஜாவின் மகள், நடிகர் விக்ரம் மகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 90-களில் திகழ்ந்தவர் ரோஜா. இவர் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். பின்னாளில் 2002-ம் ஆண்டு நடிகை ரோஜா இயக்குநர் செல்வமணியை மணமுடிந்தார். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், அன்சுமாலிகா திரைப்படத்துறையில் கால்தடம் பதிக்க தயாராகிவருகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்றில் அன்சுமாலிகா கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகை ரோஜா –  இயக்குநர் செல்வமணி தம்பதியினரின் மகளான அன்சுமாலிகா ‘தி ஃபிளேம் இன் மை ஹார்ட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், 2021-ம் ஆண்டின் சிறந்த சமூக சேவகர் விருதையும் இவர் பெற்றுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....