Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல! அண்ணாமலை எச்சரிக்கை

    நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல! அண்ணாமலை எச்சரிக்கை

    பாஜகவை எப்படி சமாளிப்பது; மக்களை எப்படி திசை திருப்புவது என திமுகவினர் நினைத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

    கோவையில் மக்களவை உறுப்பினரான ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 

    அப்போது அவர் பேசியதாவது:

    ஆ.ராசா பேசிய பேச்சு புதியதல்ல, தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் ஆகியவர்களும் இதுபோலத்தான் பேசுவார்கள். திமுகவினர் கடத்த காலங்களில் பேசிய பேச்சுகளை ஊடகங்களில் வர விட மாட்டார்கள். ஆனால், இப்போது சமூக வலைதள காலம், அரசியல் களம் மாறிவிட்டது. மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

    தந்தை பெரியாரின் புத்தகத்தில், ‘ஓட்டுக்காக பொண்டாட்டியை தவிர எல்லாத்தையும் கொடுக்குறான்’ என திமுகவினரை பேசி இருக்கின்றார். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் ஆ.ராசா இதையும் ஏற்றுக்கொள்வாரா?

    காவல்துறையில் பணியாற்றிய போது, 5000 நாட்களில்  2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட்டு இருக்கின்றேன். மத்திய அரசிற்கு தமிழ்நாட்டில் அதிகாரம் இல்லை என நினைக்க கூடாது. இதை இங்கே இருக்கும் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் உணர வேண்டும்.

    உண்மையில் பாஜகவினர் தான் சுயமரியாதைகாரர்கள். பாஜகவுக்கு பொருத்தமான சமூகநீதி, சுயமரியாதை ஆகிய வார்த்தைகளை  திமுகவினர் வெட்டி, ஒட்டி வைத்து இருக்கிறார்கள். திமுகவினர் பெண் மேயர்களை நிறுத்தி இருக்கின்றனர். ஆனால், அவர்களை திமுக நிர்வாகிகள் அடிமையாக நடத்துகின்றனர்.

    திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜகண்ணப்பன், பொன்முடி ஆகியவர்கள் மீது திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

    கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அனைத்திலும் கமிஷன் வாங்குகின்றார்.

    தமிழ்நாடு காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. எங்களின் மீது காவல் துறை கையை வைத்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பென்சன் கிடைக்க வில்லை என்றாலோ, காவல்துறையின் ஆடையை ஏன் அணிந்தோம் என கவலைபட்டாலோ நாங்கள் பொறுப்பில்லை.

    சனாதன தர்மத்தின் மீது திமுக கையை வைத்து பா.ஜ.கவை ஆட்சி கட்டிலில் அமர வைக்க இருக்கிறது. வருகிற 2024 ஆம்  ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.

    முதலமைச்சரின் வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பெயருக்கு முதல்வராக இருந்தாலும் எங்களைத் தாண்டி கோட்டைக்கு செல்ல முடியாது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மு.க.அழகிரி மகன் அடுத்த மத்திய அமைச்சரா? ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் திமுகவில் பரபரப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....