Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை! அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்...

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை! அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்…

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்பட பல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால், தொடர்ந்து தற்கொலை மற்றும் பண இழப்பு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இதனால், பல அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும்  ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய கோரிக்கை விடுத்து வந்தனர். 

    இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஏற்படும் பாதிப்புகளை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். 

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

    மேலும், இந்த ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: மு.க.அழகிரி மகன் அடுத்த மத்திய அமைச்சரா? ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் திமுகவில் பரபரப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....