Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்செல்வராகவனுக்கு 'இன்ப அதிர்ச்சி' கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்..

    செல்வராகவனுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்..

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வராகவன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். 

    செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் என்பதில் பலருக்கும் மாற்று கருத்து இருக்காது. கதைகளிலும், அதை படமாக்கும் விதத்திலும் மற்ற இயக்குனர்களோடு மிகவும் வேறுபட்டு காணப்படுபவர்தான், செல்வராகவன். இக்கூற்றை அவர் திரைப்படங்களைப் பார்த்த அனைவருமே ஒப்புக்கொள்வர். 

    இப்படியான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், ‘நானே வருவேன்’. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    இதற்கு முன்பாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றிய அத்தனை திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே நற்பெயருள்ளது. இந்நிலையில், மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க : ஹீரோயினாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள்! அதுவும் முதல் படத்திலேயே சூப்பர் ஹீரோ மகனுக்கு ஜோடியாக…

    நானே வருவேன் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இருந்து யுவன் குரலிலும், செல்வராகவன் வரியிலும் வெளிவந்த ‘வீரா சூரா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    முன்னதாக, செப்டம்பர்-15-ம் தேதி நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதன் இசையும், டீசர் தொகுக்கப்பட்டிருக்கும் விதமும் வெகுவாக மக்களை ரசிக்க வைத்துள்ளது. 

    selva

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வராகவன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில், இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் இடம்பெற்றுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....