Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்! காற்று மாசால் தில்லி சுகாதாரத்துறை அதிரடி

    வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்! காற்று மாசால் தில்லி சுகாதாரத்துறை அதிரடி

    வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் கோரிக்கை வைத்துள்ளார். 

    தில்லியில் சமீப காலமாகவே காற்றின் தரம் மிக மோசமான நிலையில், தொடர்ந்து காணப்படுகிறது. இதனிடையே காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. 

    குறிப்பாக, காற்றின் தரத்தை மேம்படுத்த தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. 

    முக்கியமாக இந்தக் காற்று மாசுபாட்டின் காரணமாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    தில்லியில் என்சிஆர் பகுதியில் இன்று காற்று மாசு அளவீட்டில் காற்றின் தரக் குறியீட்டு எண் 406 ஆக பதிவாகியுள்ளது. இதன்காரணமாக காற்று மாசு அளவீடுகளில் 039 என்ற கடுமையான பிரிவில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே, சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வாகனங்களின் மாசுபாட்டை குறைக்க முடிந்தளவு வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்த மாணவி தற்கொலை! தந்தை கண்னமுன்னே நடந்த கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....