Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டில் வேளாண், உணவு பொருள்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு

    நாட்டில் வேளாண், உணவு பொருள்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு

    நாட்டில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் ஏற்றுமதி 2-வது காலாண்டு நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல நிறுவனங்கள் முடங்கியதால், பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. 

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொழில்துறை வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேற்ற நிலை தொடர்ந்து காணப்படுகிறது. 

    இதனிடையே மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று பேசுகையில், நாட்டில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். 

    தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியும் இந்த நிதியாண்டில் அதிகரித்து இருப்பதாகவும் கூறினார். 

    மேலும் அவர், மத்திய அமைச்சர், இந்த நடப்பு நிதியாண்டில் 6 மாதங்களை, கடந்த நிதியாண்டில் இதே மாதங்களுடன் ஒப்பிடும்போது பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....