Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த அவதார் திரைப்படத்தின் டிரெய்லர்; வியப்பில் ரசிகர்கள்!

    வெளிவந்த அவதார் திரைப்படத்தின் டிரெய்லர்; வியப்பில் ரசிகர்கள்!

    அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் -தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. 

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை பெரிய வியப்பாகவே ரசிகர்களிடத்தில் இருந்தது. இதையடுத்து, அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதையடுத்து, அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். 

    அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இறுதியில் அவதார் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று ‘அவதார் -தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. இந்த டிரெய்லர் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. திரையரங்குகளில் அதீத தொழில்நுட்பத்துடன் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்படியிருக்குமென ரசிகர்கள் தற்போதே ஆவலில் உறையத் தொடங்கி விட்டனர். 

    இதையும் படிங்கராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பம்! பிரபல ரவுடிகள் 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....