Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை' திட்டம் தேறியதா? இல்லையா? - வெளிவந்த பதில்!

    ‘வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை’ திட்டம் தேறியதா? இல்லையா? – வெளிவந்த பதில்!

    பிரிட்டனில் ‘வாரத்தில் 4 நாள்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘வாரத்தில் நான்கு நாள்கள் வேலை’ என்ற திட்டத்தை சோதனைச் செய்ய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு முன்வந்தன. 

    அதன்படி, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாள்கள் வேலை செய்யும் சோதனை திட்டத்தை பிரிட்டனில் உள்ள பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தின. தற்போது இந்த சோதனையானது முடிவடைந்துள்ளது. 

    இந்தச் சோதனைகள் முடிவில், 4 நாள்கள் வேலை திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 91 சதவிகிதம் நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடரப்போவதாகவும், 4 சதவிகிதம் நிறுவனங்கள் இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 4 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை தொடரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

    மேலும், இந்த சோதனைக்கு சராசரியாக 10-க்கு 8.5 மதிப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வணிக உற்பத்தித் திறன் மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு 7.5 சதவிகித மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால்,  ‘வாரத்தில் 4 நாள்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின் தேவை அதிகரிக்க வாயப்பு; அனல் மின் நிலையங்களுக்கு பறந்த உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....