Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஜீன்ஸ்க்கு பதில் வெங்காயமா? பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    ஜீன்ஸ்க்கு பதில் வெங்காயமா? பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    ஜீன்ஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இன்றைய காலக்கட்டத்தில் யாரும் ஆன்லைனில் ஆர்டர் செய்யாமல் இருப்பதில்லை. சின்ன பொருள் தேவை என்றாலும் உடனே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே மொபைல் போனை பயன்படுத்தி செயலிகளில் ஆர்டர் கொடுத்துவிடுகிறோம். அப்படி ஆர்டர் செய்பவர்கள் அனைவருக்கும் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் தான் சென்று சேருகிறதா? என்பது கேள்வி குறியாகத் தான் இருந்து வருகிறது. 

    ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் சென்று சேர்ந்ததை எல்லாம் கேட்டிருப்போம். ஆனால், தற்போது ஒரு பெண் ஜீன்ஸ் ஆர்டர் செய்ததற்கு காய்கறி வகைகளில் ஒன்றான வெங்காயம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இங்கிலாந்து நாட்டின் ‘டெபாப்’ என்ற பயன்படுத்திய பொருள்களை விற்பனை செய்யும் செகனண்ட் ஹாண்ட் பேஷன் தளத்தில், பெண் ஒருவர் ஜீன்ஸ் பேண்டை ஆர்டர் செய்தார். ஆனால் வந்ததோ ஒரு பை நிறைய வெங்காயம் மட்டுமே. இதுகுறித்து அந்தப் பெண் சப்பிளையர்களிடம் கேட்டதற்கு, இது எப்படி நடந்தது என தெரியவில்லை என கூறியுள்ளனர். 

    இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற அனுபவத்தை சந்தித்த பலரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இப்படி கூட திருமணத்தை நிறுத்தலாமா? லெஹன்ஹா உடையால் மணமகள் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....