Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்விழிக்கவே முடியல..ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூக்கம் - பெண்ணுக்கு வந்த சோதனை!

    விழிக்கவே முடியல..ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூக்கம் – பெண்ணுக்கு வந்த சோதனை!

    பிரிட்டனில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குகிறார் என்ற செய்தி உலகளவில் பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. 

    உலகளவில் பல இளைஞர்கள் தற்போது தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் குறைந்த அளவு தூக்கத்தையே மேற்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளுக்கு ஆறு மணிநேரமாது குறைந்த பட்சம் தூங்குங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும், பெரும்பாலானோர் அதை பேணுவதில்லை. 

    இந்நிலையில், பிரிட்டனில் உள்ள ஒரு நபருக்கு தூங்குவதே பிரச்சனை என்றாகியுள்ளது. பிரட்டனை சேரந்த ஜோனா காக்ஸ்க்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒரு இல்லத்தரசி. 

    இவரது தூங்கும் நேரம் கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் ஜோனா காக்ஸ் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாள்போக்கில் தூங்கும் நேரம் உயர்ந்து தற்போது தினத்துக்கு 22 மணி நேரம் வரை தூங்குகிறார். 

    குறிப்பிட்ட நேரத்தில் தமக்கு இருப்பது பிரச்சினை என்று ஜோனா காக்ஸ் அறிந்தபோது, மனநலக்கோளாறு எனக் கருதி மனநலம் சார்ந்த மருத்துவமனைகளில் ஏறி இறங்கினார். ஆனால் எங்கும் தீர்வு எட்டவில்லை. இச்சூழலில் தனக்கு இருப்பது ‘இடியோபதிக் ஹைபர்சோம்னியா’ என்று மருத்துவர்கள் மூலம் ஜோனா அறிந்துக்கொண்டார். 

    இதையடுத்து, ஜோனாவின் நிலையை சரிசெய்ய மருத்துவர்கள் தற்போது ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் ஜோனா அதிகபட்சமாக சேர்ந்தார்போல ஒருமுறை 4 நாட்கள் தூங்கியிருக்கிறார். இயல்பான வாழ்வை வாழ முடியவில்லை என ஜோனா கவலையில் உள்ளார். 

    ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘லால்-சலாம்’.. படப்பிடிப்பு எப்போது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....