Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'லால்-சலாம்'.. படப்பிடிப்பு எப்போது?

    ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘லால்-சலாம்’.. படப்பிடிப்பு எப்போது?

    நடிகர் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ள ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்தவுடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் போன்றோர் நடிக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பட பூஜை போடப்பட்டு மாதங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. 

    இந்நிலையில், வருகிற மார்ச் 7-ஆம் தேதி ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேநேரம், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170-ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இருமல் மருந்து குடித்த உயிரிழந்த குழந்தைகள்; நடவடிக்கை எடுத்த அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....