Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇணையதளம் வாயிலாக போதைப்பொருள் விற்பனை; சென்னையில் பயங்கரம்

    இணையதளம் வாயிலாக போதைப்பொருள் விற்பனை; சென்னையில் பயங்கரம்

    டார்க் இணையதளம் மூலமாக எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    சென்னையில் மதுபான கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் சிலர் சட்ட விரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

    அப்படி நடத்தப்பட்ட விசாரணையில், சக்திவேல் என்பவர் டார்க் என்ற இணையதளம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப் பொருட்களை சென்னைக்கு வரவழைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாடம்பாக்கத்தில் தலைமறைவாகி இருந்த சக்திவேலை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

    மேலும் சக்திவேல் வீட்டில் சோதனை செய்தபோது எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது அறையில் உடன் இருந்த ஷாம் சுந்தர், ஸ்ரீகாந்த், நரேந்திர குமார் ஆகிய மூன்றும் பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

    விசாரணையில், மென் பொறியாளரான சக்திவேல் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. மேலும் சக்திவேல் டார்க்  இணையதளங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்ப் போதைப் பொருட்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார். அதோடு இணையதளத்தில் 200 முதல் 600 ரூபாய் வரை ஸ்டாம்ப் போதைப்பொருள்களை வாங்கி சென்னையின் பல பகுதிகளில் 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். 

    அதேசமயம், சக்திவேலிடம் இருந்து ரயில்வேயில் பணியாற்றும் ஷாம் சுந்தர் டுளுனு ஸ்டாம்ப் போதைப்பொருளை 1500 ரூபாய்க்கு வாங்கி அவருக்கு தெரிந்தவர்களுக்கு 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக கால் சென்டரில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் நட்சத்திர விடுதி மேலாளர் நரேந்திர குமார் ஆகிய இருவரும் உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 

    வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட டுளுனு ஸ்டாம்ப் போதைப்பொருள்களுக்கான பணத்தை க்ரிப்டோ கரன்சி மூலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதைப்பொருள்களையும் கஞ்சா செடிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதனிடையே, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார். 

    ஆஸ்கர் மேடையில் தீபிகா படுகோன்; கிடைத்த அங்கீகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....