Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்தூர் டெஸ்ட்டில் எழுந்த விமர்சனம்; தீர்ப்பு வழங்கிய ஐசிசி..

    இந்தூர் டெஸ்ட்டில் எழுந்த விமர்சனம்; தீர்ப்பு வழங்கிய ஐசிசி..

    இந்தூர் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஆடுகளத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 

    இதில் மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்தப் போட்டியின்போது, இந்தூர் டெஸ்ட் ஆடுகளம் சரியாக இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தூர் டெஸ்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் குறித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளது ஐசிசி. 

    அதன்படி, பேட்டுக்கும் பந்துக்குமான சமமான போட்டி ஏற்படவில்லை. ஆடுகளம், ஆரம்பம் முதல் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தூர் விளையாட்டுத் திடலுக்கு மூன்று அபராதப் புள்ளிகளையும் வழங்கியுள்ளார்.

    இந்தத் தண்டனையை எதிர்த்து 14 நாள்களுக்குள் பிசிசிஐ மேல்முறையீடு செய்யலாம். 5 வருடக் காலக்கட்டத்தில் எந்த ஒரு விளையாட்டுத் திடல், ஐந்து அபராதப் புள்ளிகளைப் பெறுகிறதோ, அந்த விளையாட்டு திடலில் ஒரு வருடத்துக்கு எந்தவொரு சர்வதேச ஆட்டத்தையும் நடத்த அனுமதி வழங்கப்படாது. 

    முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் முதலில் தரம்சாலா மைதானத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்குச் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்தூருக்கு 3-வது டெஸ்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; சரிசெய்த நிர்வாகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....