Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; சரிசெய்த நிர்வாகம்..

    மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; சரிசெய்த நிர்வாகம்..

    மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதன் காரணமாக தற்போது மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.  

    ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

    இதனால், விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள், ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. 

    இதே போல, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. 

    இந்நிலையில் 20 மணி நேரத்திற்கு பிறகு 6 பேர் கொண்ட குழு மூலமாக தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படத்தைத் தொடர்ந்து ரயில் சேவை சீராகியுள்ளது. 

    கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது டபிள்யுபில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....