Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇருமல் மருந்து குடித்த உயிரிழந்த குழந்தைகள்; நடவடிக்கை எடுத்த அரசு

    இருமல் மருந்து குடித்த உயிரிழந்த குழந்தைகள்; நடவடிக்கை எடுத்த அரசு

    இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    நாட்டில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதன் காரணமாக உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. 

    இதையடுத்து அந்த இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதுடன், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தின் மாதிரிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 22 மாதிரிகளில் தரம் குறைந்து இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ‘மேரியன் பயோடெக்’ நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஜெயா ஜெயின், சச்சினி ஜெயின் ஆகிய இருவர் மீதும் மருந்து தயாரிப்பில் முறைகேடு, மருந்துகளை மாற்றி விற்பனை செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த அக்டோபரில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. 

    மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; சரிசெய்த நிர்வாகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....