Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபூனை கடிக்கு ஊசி போட போய், நாய்க்கடி வாங்கிய அதிர்ச்சி சம்பவம்

    பூனை கடிக்கு ஊசி போட போய், நாய்க்கடி வாங்கிய அதிர்ச்சி சம்பவம்

    கேரளாவில் பூனை கடிக்கு ஊசி போட சென்ற பெண்ணை, நாய்க் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    கேரள மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டில் இதுவரை, ரேபிஸ் காரணமாக 21 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதனிடையே, கேரளாவில் பூனை கடைக்கு ஊசி போடா சென்ற பெண்ணை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா (31). இவரை எதிர்பாராத விதமாக பூனை கடித்ததால் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்கு சென்றார். 

    அபர்னாவுடன் அவரது தந்தையும் சென்று உள்ளார். அந்த பெண் காலை எட்டு மணியளவில் சென்ற நிலையில், சுகாதார நிலையத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது சற்றும் எதிர்ப்பாராத விதமாக நாற்காலியின் கீழ் படுத்திருந்த தெருநாய் ஒன்று அவரை கடித்துவிட்டது. இதைக்கண்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை பொதுநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு! அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....