Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலக கோப்பையில் பும்ரா இல்லையா? கங்குலி சொன்ன பதில்..

    உலக கோப்பையில் பும்ரா இல்லையா? கங்குலி சொன்ன பதில்..

    இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

    இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களுள் ஒருவர், பும்ரா. இவருக்கு வயது 28.  சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் பும்ரா விளையாடவில்லை .

    இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இடம்பெற்றிருந்தார் பும்ரா. இருப்பினும் ஆடும் லெவனில் இவர் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தன. 

    இதையடுத்து, சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. மேலும், இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் பும்ரா விலகியதாக தகவல்கள் வேகமாக பரவின. 

    இதையும் படிங்க: மீண்டும் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை! உலக நாடுகளை விடாமல் வம்பிழுக்கும் வடகொரியா…

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்தது பிசிசிஐ. மேலும், பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் . மேலும்,  பும்ரா உடல்நிலைக்குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாங்கள் அறிவோம் எனவும் அவர் கூறினார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரின் முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், நாளை இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: டேட்டிங் செய்ய பணம் கேட்ட ரசிகர்…’இந்தாப்பா வச்சிக்கோ’ என பணம் தந்த கிரிக்கெட் வீரர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....