Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்டேட்டிங் செய்ய பணம் கேட்ட ரசிகர்...'இந்தாப்பா வச்சிக்கோ' என பணம் தந்த கிரிக்கெட் வீரர்..

    டேட்டிங் செய்ய பணம் கேட்ட ரசிகர்…’இந்தாப்பா வச்சிக்கோ’ என பணம் தந்த கிரிக்கெட் வீரர்..

    ரசிகர் டேட்டிங் செய்ய ரூ.500 அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அமித் மிஸ்ரா. 

    இந்தியாவின் இடதுகை சூழற்பந்துவீச்சாளர்களில் முக்கியமான ஒருவர், அமித் மிஸ்ரா. இவர் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடர்களில் பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். 

    தற்போது அமித் மிஸ்ரா தனது சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். சமீபத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக அமித் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பதிவு பலராலும் பகிரப்பட்டது. 

    இந்நிலையில், லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா போட்டியில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் மிஸ்ரா பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவுக்கு  ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    ட்விட்டர்

    அவ்வகையில், ரசிகர்களில் ஒருவர் ‘ தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். இதையடுத்து மற்றொரு நபர் பணம் கேட்ட அந்த நபரிடம் உங்களது யுபிஐ விவரங்களை பகிர்மாறு ரிப்ளை செய்திருந்தார்.

    அந்த நபர் தனது கூகுள்பே எண்ணை பகிரவே, அந்த எண்ணுக்கு ரூ.500 அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அமித் மிஸ்ரா. பணம் அனுப்பிய ஸ்கீரின்ஷாட்டை தனிப்பதிவாக பகிர்ந்த அமித் மிஸ்ரா, ‘டேட்டிங் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் ,அமித் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்தார். அமித் மிஸ்ராவின் இந்த செயல் தான் இணையத்தில் பலரிடத்திலும் ஈர்ப்பை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ட்விட்டரில் தவறு செய்தால் இனி திருத்திக்கொள்ளலாம் – விரைவில் அறிமுகமாகும் எடிட்டிங் வசதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....