Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவடகிழக்கு பருவமழை: மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை-அரசு செய்யப்போவது என்ன ?

    வடகிழக்கு பருவமழை: மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை-அரசு செய்யப்போவது என்ன ?

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து ,அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அனைத்து துறை செயலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். இந்த வருடத்திற்கான பருவமழை முடிந்து ,பல மாநிலங்களில் மழையும் குறைந்து விட்டது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட அதிகமாக 45 சதவீதம் பெய்துள்ளது. 32 செ.மீ என்ற அளவில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு ,இந்த ஆண்டு கூடுதலாக 47 செ.மீ என்ற அளவில் பெய்துள்ளது .11 மாவட்டங்களில் மிக கனமழையும் ,16 மாவட்டங்களில் கனமழையும் ,9 மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவாகி உள்ளது. 4 மாவட்டங்களில் மட்டுமே இயல்பை விட குறைவான அளவில் தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    இதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் (அக்) 20-ந் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனரான மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் 20-ந் தேதி தொடங்குவதற்கான அனைத்து சூழல்களும் சிறப்பாகவே உள்ளது . தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயல சீமா, கேரளா மற்றும் தென் கர்நாடகா ஆகிய 5 வானிலை துணைப் பிரிவுகளை உள்ளடக்கிய தென் தீபகற்ப இந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும். 88 சதவீதம் முதல் 112 சதவீதம் வரை சராசரி மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தென் தீபகற்ப இந்தியாவில் மழையின் LPA சுமார் 334.13 மி.மீ. ஆகும். மழைப்பொழிவைத் தவிர, வடகிழக்கு பருவமழை வெப்பமண்டல சூறாவளிகளுக்கு பெயர் பெற்றது. சராசரியாக, பருவத்தில் மூன்று சூறாவளி புயல்கள் காணப்படுகின்றன, ஆனால் இந்த ஆண்டு நிலவும் லாநினா மற்றும் எதிர்மறை இந்தியப் பெருங்கடலின் காரணமாக வங்காள விரிகுடாவில் மேலும் தீவிரமான புயல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால் ,அதற்கான வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் ,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிடும் பணிகளை துவங்கியுள்ளது.

    இதையும் படிங்க: நவீன வசதிகளுடன் உருவாகும் மெரினா வர்த்தக மையம் – என்னென்னெ வரப்போகிறது தெரியுமா?

    அதன் முதல் படியாக , பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் ,தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையையொட்டி கண்காணிக்கபடக் கூடிய நீர் ஆதார இடங்கள் மற்றும் மக்கள் பாதிக்கக்கூடிய இடங்கள், அவர்களை தங்கவைப்பதற்கான இடங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....