Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் போட்ட உச்சநீதிமன்றம்! ஓய்வூதிய வழக்கில் அதிரடி..

    தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் போட்ட உச்சநீதிமன்றம்! ஓய்வூதிய வழக்கில் அதிரடி..

    தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து உத்தரவிட்டது, உச்சநீதிமன்றம். 

    தமிழக போக்குவரத்துத் துறையில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர், பி.ஜி.வேணுகோபால். இவர், 1995-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை காட்டி ஓய்வுதியம் வழங்க போக்குவர்த்துத் துறை மறுத்துள்ளது. 

    இதனால், பி.ஜி.வேணுகோபால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட ஆர்ம்பித்தது முதல், உச்ச நீதிமன்றம் வரை போராடி அந்த உரிமையை பெற்றார் . இதனால், 2009-ம் ஆண்டு வரையிலான ஓய்வூதியத்தை தந்த போக்குவரத்துத் துறை அதன்பிறகு தர மறுத்துவிட்டது. 

    இதையும் படிங்க: ஆக்ரோஷ சிங்கத்திற்கு ‘கிரீன் சிக்னல்’ – தேசிய சின்ன மாறுபாடு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    இதைத்தொடர்ந்து, மீண்டும் 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார், வேணுகோபால். இந்த வழக்கில் ஓய்வூதிய நிலுவைத்தொகையை போக்குவரத்துத் துறை வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

    இந்நிலையில், `ஏற்கெனவே, இவருடைய ஓய்வூதிய உரிமை தொடர்பான பிரச்சனையில், உச்ச நீதிமன்றமே இறுதி உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அவர் ஓய்வூதியத்துக்கு தகுதியற்றவர் என்று தமிழக அரசு துணிச்சலாக வாதிடுவது தவறானது. இப்படி தேவையில்லாத விஷயங்களுக்கு வழக்குப்போட்டு நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கிறது’ என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....