Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்9 ஆம் நூற்றாண்டை கண் முன் நிறுத்திய மணிரத்னம்! பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

    9 ஆம் நூற்றாண்டை கண் முன் நிறுத்திய மணிரத்னம்! பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

    கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல ஜாம்பவான்கள் படமாக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதை சாதித்துக் காட்டி உள்ளார்.

    தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே பொன்னியின் செல்வன் கதை உருவானது.

    சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா?

    மணிரத்தினம் நினைத்ததை சாதித்தாரா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

    கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு நிச்சயம் முழு கதையும் தெரிந்திருக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

    ponniyin selvan review

    கதையின் தொடக்கத்திலேயே ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திர பல்லவன் உடன் இணைந்து ராஷ்டகூடர்களுடன் போர் புரிகிறார்கள். சரியான நேரத்தில் வந்திய தேவனும் போரில் இணைந்ததும் எதிரி நாட்டை ஆதித்ய கரிகாலன் கைப்பற்றுகிறார்.

    அதன் பிறகு, தன் நண்பனான வந்திய தேவனை அழைத்து சந்திக்கும் ஆதித்ய கரிகாலன்.. கடம்பூர் அரண்மனையில் சோழ சிற்றரசர்கள் மற்றும் பெரிய பழுவேட்டரையர், ஏதோ சதித் திட்டம் தீட்ட போவதாக தகவல்கள் வந்துள்ளதாகவும், அதனால், அங்கு சென்று அதை பற்றி அறிந்து கொண்டு.. உடனே தஞ்சைக்கு சென்று தனது தந்தை சுந்தர சோழனிடமும், இளைய பிராட்டி குந்தவையிடமும் சொல்லும்படி, ஆதித்ய கரிகாலன் தனது வாளை வந்தியத்தேவனிடம் கொடுத்து அனுப்புகிறார்.

    ponniyin selvan review

    அந்த வேண்டுகோளை ஏற்ற வந்திய தேவனும்.. கடம்பூர் அரண்மைனையை நோக்கி பயணிக்கிறார்..

    இதையடுத்து, குறுநில மன்னரும் சோழ தேசத்து அதிகாரியாகவும் இருக்கும் பெரிய பழுவேட்டயர், வயதான காலத்தில் இளம் பெண் நந்தினியை திருமணம் செய்து கொண்டு, போகும் இடங்களுக்கெல்லாம் பல்லக்கில் அவரையும் கொண்டு போகிறார் என்கிற அவச்சொல் வருகிறது. அதே சமயம், கடம்பூர் மாளிகையில் குறவைக் கூத்துடன் பெரிய சதித்திட்டமே போடுகிறார் பெரிய பழுவேட்டயர். இதனை வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியன் நம்பி மறைந்திருந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

    சுந்தர சோழருக்கு பிறகு பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் தான் அரியணை ஏற நேரிடும். ஆனால், அந்த அரியணைக்கு சொந்தக்காரன் நான் தான் என சுந்தர சோழரின் சகோதரர் மகன் மதுராந்தகன் கூற அவருக்காக ஆதித்த கரிகாலனை கொல்லத்தான் அந்த ஆலோசனை கூட்டத்தில் சதி செய்யப்படுகிறது.

    இதற்கு பிறகு, வந்திய தேவன் தஞ்சைக்கு செல்லும் வழியில், பெரிய பழுவேட்டயர் மனைவியான நந்தினியை சந்தித்து, அவரிடம் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு தஞ்சை அரண்மனைக்கு செல்கிறார்.

    அங்கு, ஆதித்திய கரிகாலன் தந்தையான சுந்தர சோழனையும், இளைய பிராட்டி குந்தவையையும் சந்தித்து, கடம்பூர் அரண்மனையில் அரசுக்கு எதிராக நடக்கும் சதி திட்டத்தை பற்றி கூறுகிறார்.

    ps1

    இதை கேட்ட குந்தவை, ஆதித்த கரிகாலனையும் அருண்மொழிவர்மனையும் சோழ தேசத்துக்கு வரவழைக்க நந்தினி செய்யும் சதி திட்டத்தையும் அதனால், நிலவும் பிரச்சனையையும் புரிந்து கொண்டு, வந்திய தேவனிடம் இலங்கைக்கு சென்று தனது தம்பி அருண்மொழிவர்மனை அதாவது பொன்னியின் செல்வரை, கையோடு தஞ்சைக்கு அழைத்து வரும்படி சொல்கிறார்.

    அதை ஏற்ற வந்திய தேவனும், இலங்கையை நோக்கி பயணம் செய்கிறார். வந்தியதேவன், படகோட்டி பூங்குழலியின் உதவியோடு இலங்கைக்கு சென்று, இளவரசர் அருண்மொழிவர்மனை சந்தித்து செய்தியைக் கூறி, அவருடன் நண்பராகிறார்.

    இதற்கிடையில், நந்தினியின் நயவஞ்சகத்தால், அருண்மொழியை சிறைபிடிக்க ஒரு சிறிய சோழ படை இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, சுந்தர சோழன், உடனே காஞ்சிக்கு சென்று, கரிகால சோழனையும் தஞ்சைக்கு அழைத்து வரும்படி குந்தவையை அனுப்பி வைக்கிறார்.

    காஞ்சியில் ஆதித்ய கரிகாலனை சந்தித்த குந்தவை தகவலை கூறுகிறார். ஆனால், ஆதித்ய கரிகாலன், நந்தினி தஞ்சையில் இருக்கும் வரை, தான் அங்கு வர போவதில்லை என கூறுகிறார்.

    இளம்வயதில் ஆதித்ய கரிகாலனும் நந்தினியும் காதலித்து இருப்பார்கள். அதே சமயம், குந்தவையால் நந்தினி தஞ்சையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டிருப்பார்.

    ponniyin selvan review

    இதில், உண்மையில் இளம் வயதிலேயே நந்தினி ஆதித்ய கரிகாலனை காதலித்தது; தஞ்சையில் சாதாரண பெண்போல நந்தினி இருந்தது அனைத்தும் சூழ்ச்சியே.. நந்தினி, பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதும் அங்கு கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, அருண்மொழிவர்மனை சிறை பிடிக்க சென்ற சோழப்படை இலங்கையை அடைகிறது. ஆனால், அங்கும் நந்தினியின் சூழ்ச்சிப்படி பாண்டிய ஆபத்து படை, சோழ படையை கொன்று சோழர்களின் கப்பலை சிறைபிடிக்கிறது.

    இது தெரியாமல், அருண்மொழிவர்மன் பூங்குழலி உதவியுடன் சோழ படையிடம் சரணடைய வருகிறார். இதற்கிடையில், வந்திய தேவனை இளவரசர் என நினைத்து கொண்டு, பாண்டிய படையினர் அவரை சிறைபிடித்து, கப்பலின் உச்சியில் கட்டி தொங்க விடுகின்றனர்.

    இதை அறிந்த அருண்மொழிவர்மன், வந்தியதேவனை காப்பாற்ற பாண்டியர்களிடம் சண்டையிடுகிறார்.

    பாண்டியர்களுக்கு எதிரான போராட்டத்தில், வந்தியதேவனும் அருண்மொழிவர்மனும் கடலில் முழ்கி போகின்றனர்.

    Mani Ratnam's 'Ponniyin Selvan 1' teaser to storm the screens on this date! - News - IndiaGlitz.com

    இளவரசர் இறந்து விட்டாரா? இல்லையா ? என்பது தெரிவதற்கு முன்பே,
    இளவரசர் அருண்மொழிவர்மன் இறந்து விட்டதாக தஞ்சை முழுவதும் செய்தி பரவுகிறது.

    இத்துடன், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முடிவடைகிறது.

    இத்திரைப்படத்தில் நிறை, குறைகள் என பல விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது அதில்,

    இயக்குநர் மணிரத்னம் முதல் frame-ல் இருந்து நேரடியாக கதைக்கு சென்று விடுவதும், பொன்னியின் செல்வன் வரலாற்றை ரசிகர்களுக்கு தெளிவாகவும் விரைவாகவும் சொல்ல முற்பட்டு இருப்பது பெரிய பலம்.

    இதையும் படிங்க.. பொன்னியின் செல்வன் ரெஸ்பான்ஸ்….நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்ட விக்ரம்

    இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் போட்டுள்ள உழைப்பு பெரிய விஷயம்.

    சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என அனைவரது நடிப்பும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துகிறது.

    தோட்டாதரணியின் பிரம்மாண்ட செட்கள், ரியல் அரண்மனைகளில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு, ரவிவர்மனின் ஒளிப்பதிவு நம்மை 9ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது.

    வந்திய தேவன் நகைச்சுவையாக பேசும் வசனங்களுக்கு ஜெயராம் நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார்.

    முதல் காட்சியிலேயே சியான் விக்ரமை காட்டும் போது, வரும் போர் காட்சிகளில் CGI சொதப்பல்கள் நிறையவே உள்ளன. 5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து அங்கொரு காட்சி இங்கொரு காட்சி என எடிட்டிங்கில் படத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டுமே என தாறுமாறாக வெட்டி இருப்பது சின்ன குழப்பத்தை புத்தகம் படித்தவர்களின் மத்தியில் எழுப்புகிறது.

    திரைக்கதை, நடிப்பில் செலுத்திய கவனத்தை இன்னமும் கூடுதலாக விஷுவலுக்கு மணிரத்னம் செலவிட்டு இருக்கலாம். ஆனால், படத்தின் கதையை பார்க்கும் ஆர்வத்தில் இதெல்லாம் மறந்து போகின்றன.

    நிச்சயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் பெரிய முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

    இதையும் படிங்க.. முதல்நாளில் மட்டும் இத்தனை கோடியா…வசூலை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....