Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசன் பார்மா நிறுவனத்திற்கு ரூ.10 கோடி அபராதம்! வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை...

    சன் பார்மா நிறுவனத்திற்கு ரூ.10 கோடி அபராதம்! வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை…

    சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபாரதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இயங்கி வருவதுதான், சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி மெறாமல் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. 

    இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரித்தது. 1994-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது சட்டவிரோதம் என கூறி சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபாரதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வடபழனி முருகன் கோயில் சக்தி கொலு; ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....