Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்நாய் வயிற்றில் பிறந்த உலகின் முதல் ''குளோனிங் ஓநாய்'' - சீன விஞ்ஞானிகள் அசத்தல்

    நாய் வயிற்றில் பிறந்த உலகின் முதல் ”குளோனிங் ஓநாய்” – சீன விஞ்ஞானிகள் அசத்தல்

    குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

    அறிவியல் உலகில் அவ்வபோது விந்தைகள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றே. நிகழும் அத்தனை விந்தைகளும் எதோவொரு வகையில் ஈர்ப்பை பெற்றுவிடுகின்றன. குறிப்பாக குளோனிங் பெரும் ஈர்ப்பை பெற்றுவிடுகின்றன.

    குளோனிங் என்பது கலவியில்லா இனப்பெருக்க முறையாகும். இதுவரை பல்வேறு உயிரனங்களை விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த சினோஜிங் பயோடெக்னாலஜி நிறுவனம் ஒரு விந்தையை நிகழ்த்தியுள்ளது. 

    அந்நிறுவனம், பெண் நாயின் அணுக்கருக்கள் மற்றும் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் பெண் ஓநாயின் சோமாடிக் செல்களை இணைத்து அவற்றிலிருந்து புதிய கருக்களை உருவாக்கி வாடகைத் தாய் முறையில் இந்த ஓநாய் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஓநாய் கடந்த ஜூன் 10 ஆம் தேதி பிறந்தது. இந்நிலையில், 100 நாள்களைக் கடந்தும் இந்த ஓநாய்  நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உலகின் முதல் குளோனிங் ஓநாயான இதற்கு ‘மாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....