Saturday, March 16, 2024
மேலும்
    Homeவானிலைஅடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து இன்று (செப்டம்பர் 22) நண்பகல் 12.00 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

    22.09.2022 மற்றும் 23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 

    24.09.2022 முதல் 26.09.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதையும் படிங்க: நேற்றைவிட இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா தொற்று

    சென்னையைப் பொறுத்தவரை:

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில், பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

    22.09.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....