Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாகனம்டூவிலரில் உள்ள டிஸ்க் பிரேக்ல ஏன் துளைகள் உள்ளது? பதில்கள் உள்ளே!

    டூவிலரில் உள்ள டிஸ்க் பிரேக்ல ஏன் துளைகள் உள்ளது? பதில்கள் உள்ளே!

    டூவிலரில் உள்ள டிஸ்க் பிரேக் பிளேட்டுகளில் உள்ள துளைகள் குறித்து இக்கட்டுரையில் உரையாடல் வழி காண்போம். 

    ஒரு நாள் மாலையில் இளவெயில் நிகழ்ந்துக்கொண்டிருக்க எப்போதும் போல அமுதாவின் அப்பா தனது டூவிலரை எடுத்தார். அதைக் கண்ட அமுதா ஓடிச்சென்று நானும் வருகிறேன் என்றாள். ‘சரிடா…. வா’ என்றார் அப்பா. 

    நேராக டூவிலர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் கடைக்குச் சென்றது. அமுதாவின் அப்பா தனது இன்னொரு டூவிலருக்காக, டிஸ்க் பிரேக் பிளேட்டை வாங்கினார். 

    அதைக்கண்டதும், ‘டிஸ்க் பிரேக்ல ஏன்பா ஓட்டை இருக்கு’ என்று தனக்கே உரிய மொழியில் கேட்டாள், அமுதா. இந்த கேள்வி அமுதாவுக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் இருக்கிறதுதானே. வாருங்கள்! அமுதாவோடு நாமும் அப்பாவின் வாயிலாக ‘டிஸ்க் பிரேக்கில் உள்ள துளைகள்’ குறித்து தெரிந்துக்கொள்வோம். 

    முதலில் டிஸ்க் பிரேக், பொதுவாக மிகவும் கூர்மையான நிறுத்தத்தை வழங்க உதவுகிறது என ஆரம்பித்த அப்பா, ‘நம்ம ஊர பொறுத்தவரைக்கும் எப்போ எது குறுக்குல வரும்னு தெரியாது..அப்படி ஏதும் குறுக்குல வரப்போ நம்மையும், குறுக்குல வரதையும் காப்பாத்துறதுல இந்த டிஸ்க் பிரேக்கின் பங்கு ரொம்பவே அதிகம்’ என்றார். 

    இதையும் படிங்க: சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள் – காரணம் என்ன தெரியுமா ?

    உடனே, அமுதா குறுக்கீட்டு ‘அன்னைக்கு ஒரு நாய் வந்துச்சே…. அப்போ நீங்க சடால்னு பிரேக் அடிச்சீங்களே…. அது இந்த டிஸ்க் பிரேக் வச்சுதானா?’ என்றாள். ஆம் என்றார் அப்பா. ‘சரி! ஆனா அந்த ஓட்டை’ என அமுதா தனது முதல் கேள்விக்கு வந்தாள். ‘இருமா..இருமா..அடுத்து அதுக்கு பதில் சொல்லதான் வரேன்’ என்றார் அப்பா. 

    பதில் சொல்லவும் தயாரானார். ‘இந்த டிஸ்க் பிரேக்குல இருக்குற ஓட்டைகள்..ரொம்பவே முக்கியமானது. டிஸ்க் பிரேக்குல அதிகமா உரசல் ஏற்படுறதுனால ஹீட் அதிகமா உண்டாகும். இந்த ஹீட் சீக்கிரமா வெளியேத்த இந்த ஓட்டைகள் பயன்படுது. ரன்னிங்ல இருக்கப்பவே காத்து கூலா இந்த ஓட்டை வழியே வருவதனால, உருவாகும் ஹீட் காணாம போயிடும்’. 

    ‘அப்படியா விஷயம்’ என அமுதா வியந்தாள். அதே சமயம் ‘இந்த ஓட்டை டிஸ்க் கூலாவுறதுக்கு மட்டும்தானாப்பா?’ என கேள்வியும் கேட்டாள். ‘ இல்லம்மா..அதுக்கு மட்டுமில்ல.. டிஸ்க்குகள் உலோகத்தினால் ஆனது. அதனால, இதன் எடை அதிகமிருக்கும். இந்த பொருளை பயன்படுத்துவதனால் இருசக்கர வாகனத்தின் எடைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும். இந்த எடையைச் குறைக்கத்தான் இந்த ஓட்டைப்போடும் யுக்தி உள்ளது. இதுனால, டிஸ்க்குகளில் 300 முதல் 500 கிராம் வரை ஓர் வாகனத்தின் எடைக் குறையும்…கிராம் கணக்குதானேனு நெனச்சாலும், இதோட பங்கு ரொம்பவே பெருசுமா’ என்றார். 

    ‘இவ்ளோ இருக்காப்பா?’ என அமுதா ஆச்சரியத்துடன் வியக்க, ‘இதோ..இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுமா’ என்று ஆரம்பித்தார். ‘மழையப்போ… நம்ம எந்த அளவுக்கு நனையுறமோ அதவிட அதிகமாவே டிஸ்க் பிரேக்கும் நனையும்.. அது ஒரு உலோகம்ன்றதுனால வழவழப்பாகிடும்..துருப்பிடிகாகத உலோகம்தான் ஆனா வழவழப்பாக அதிக சான்ஸ் இருக்கு…இந்த மாதிரி டைம்ல பிரேக் பிடித்தாலும் வண்டி நிற்காது. விபத்து ஏற்படும். இத தவிர்க்கவும், டிஸ்க் பிரேக்குல இருக்க ஓட்டை உதவுது.’ என்று சொல்லி முடித்தார். 

    ‘கொஞ்சம் கேட்டா…நீ நெறைய சொல்ற..போ’ப்பா’ என அமுதா கூற சிரித்துக்கொண்டார், அமுதாவின் அப்பா. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....