Friday, May 3, 2024
மேலும்
    Homeஅறிவியல்பீர் பாட்டில்கள் ஏன் பச்சை மற்றும் காப்பி நிறத்தில் மட்டுமே உள்ளன? - பதில் உள்ளே!

    பீர் பாட்டில்கள் ஏன் பச்சை மற்றும் காப்பி நிறத்தில் மட்டுமே உள்ளன? – பதில் உள்ளே!

    உலகெங்கிலும் பல லட்சம் லிட்டர் கணக்கில் மதுபானங்கள் தினமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. பல கோடி மக்கள் மதுவிற்கு அடிமையாகி அதனைப் பருகாமல் இருக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    உலகெங்கிலும் மிகவும் பிரபலமடைந்துள்ள இந்த மதுபானங்கள் வித விதமான கண்ணாடிக் குடுவைகளில் விற்கப்படுகின்றன. முக்கியமாக மதுபானங்களில் ஒரு வகையான பீர் என்னும் மதுவானது பச்சை மற்றும் காப்பி நிற கண்ணாடிக் குடுவைகளில் விற்கப்படுகிறது.

    இந்த வகையான மதுபானங்கள் நிறமில்லாத கண்ணாடிக் குடுவைகளில் விற்கப்படுவது இல்லை. அது மட்டுமின்றி வேறு எந்த நிற கண்ணாடிக் குடுவைகளில் இந்த பீர் வகைகள் விற்கப்படுவதில்லை.

    பீர்கள் ஏன் பச்சை மற்றும் காப்பி நிற கண்ணாடிக் குடுவைகளில் விற்கப்படுகின்றன? என்பது பற்றி பார்க்கலாம்..

    ஆரம்ப காலத்தில் பீர் வகைகள் நிறமில்லாத கண்ணாடிக் குடுவைகளில் மட்டுமே விற்கப்பட்டன. ஆனால் சூரிய வெளிச்சத்தில் இந்த வகையான நிறமில்லாத கண்ணாடிக் குடுவைகள் வைக்கப்படும் போது, சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக்கதிர்கள், மதுபானங்களின் இருக்கும் ஒரு வகை அமிலத்துடன் வினை புரிந்து மதுபானங்களின் தன்மையினை பாதிக்கின்றன.

    இந்த வகையில் பாதிக்கப்பட்ட மதுபானங்கள் ஒரு விதமான நாற்றத்தினை வெளியிடுகின்றன. இதனால் மதுபான விற்பனையானது பெரும் நட்டத்தினை நோக்கிச் சென்றுள்ளது.

    இந்த நட்டத்திலிருந்து மதுபான விற்பனையினை எப்படிப் பாதுகாப்பது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய பொழுது காப்பி நிற கண்ணாடிக் குடுவைகள் சூரிய ஒளி உட்புகுவதினை தடுத்தது கண்டறியப்பட்டது. எனவே காப்பி நிற கண்ணாடிக் குடுவைகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

    இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், காப்பி நிற கண்ணாடிக் குடுவைகளின் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த சமயத்தில் வேறு நிறங்களில் கண்ணாடிக் குடுவைகளை பற்றி ஆராய்ச்சி செய்த போது, பச்சை நிற கண்ணாடிக் குடுவைகளும் சூரிய ஒளி உட்புகுவதினைத் தடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அன்று முதல் அனைத்து பீர் வகைகளும் காப்பி மற்றும் பச்சை நிற கண்ணாடிக் குடுவைகளில் மட்டுமே விற்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    மனக் குழப்பங்கள்…சுதந்திர தன்மை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....