Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்மனக் குழப்பங்கள்...சுதந்திர தன்மை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

    மனக் குழப்பங்கள்…சுதந்திர தன்மை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

    மேஷம்:

    வளர்ச்சி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் உறுதியான மனநிலை காணப்படும். பணியிடத்தில் சிறந்த நிலையில் இருப்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படும். அதிர்ஷ்டம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    ரிஷபம்:

    இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படும். பயணம் கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இன்று செலவுகள் அதிகம் காணப்படுவதால் சேமிக்க இயலாது. இன்று பதட்டம் காணப்படும். எனவே இன்று இதனை தவிர்த்தல் சிறந்தது.

    மிதுனம்:

    இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படாது. உங்கள் துனையிடத்தில் பொறுமையின்மையும் கவனமற்ற வார்த்தைகளும் இருவருக்குமிடையே மகிழ்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்தும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். சளி மற்றும் தோல் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படலாம்.

    கடகம்:

    இன்றைய நாள் உங்களுடைய இலக்குகளை அடைய சரியான முயற்சி எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் நன்மை கிடைக்கும். நீங்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். நிதிநிலைமை ஸ்திரமாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக கானபப்டும்.

    சிம்மம்:

    இன்று கடினமான சூழ்நிலைகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டிய நாள். பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் கோபத்தை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அசௌகரியம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

    கன்னி:

    இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பணியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திட்டமிட்டு பணியாற்றுவது விளைவுகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். துணையுடனான உறவு பாதிக்கப்படும். இனிமையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணபுழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

    துலாம்:

    இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். பணியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. திட்டமிட்டு அட்டவணையிட்டு பணியாற்றுவது அவசியம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்ய முற்படலாம். பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

    விருச்சிகம்:

    இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படும். உங்களிடம் காணப்படும் மன தைரியம் காரணமாக நீங்கள் இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

    தனுசு:

    இன்று உங்கள் திட்டங்களில் பலன் கிடைக்கும் இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்கள் பணியில் திருப்தி அடைவீர்கள். உங்கள் துணையுடன் அன்பையும் புரிந்துணர்வையும் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை இன்று சாதகமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மகரம்:

    இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் தவறுகள் நேராமல் தடுக்கலாம். உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. இன்று ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

    கும்பம்:

    இன்று தேவையற்ற மனக் குழப்பங்கள் சுமையாக இருக்கும். உங்கள் பணியில் தவறுகள் நேரும். கவனமாக பணியாற்றினால் சிறப்பாக செயலாற்றலாம். உங்கள் துணையிடம் குழப்பமான மன நிலையை வெளிப்படுத்துவீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    மீனம்:

    இன்று நீங்கள் அதிகப் பணியில் மூழ்கி இருப்பீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள். பணியிடச் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வகையில் பண வரவு காணப்படும். உங்களின் ஆரோக்கியம் இன்று சிறப்பாக காணப்படும்.

    சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....