Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'கந்து வட்டியால் காவலருக்கே இப்படி என்றால்......' - எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

    ‘கந்து வட்டியால் காவலருக்கே இப்படி என்றால்……’ – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

    “கந்து வட்டியால் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், சாமானியர்களின் நிலை என்ன?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடலூர் – புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

    வழக்கின் முழுவிவரம்:-

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார். இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1-ம் தேதி கடலூர் வந்த அவர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தற்கொலை முயற்சி செய்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டாராம். ஆனால் அந்த பெண் புரோ நோட்டை கொடுக்காமல், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த போது, மயங்கி விழுந்தது தெரியவந்தது.

    இதற்கிடையில் அவரது உடல் நிலை மோசமானதால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூரில் கந்துவட்டி கொடுமையினால் காவலரே தற்கொலை செய்ய முயற்சித்த  சம்பவம் அங்குள்ள காவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடலூர்,புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் திரு.செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கள்ள லாட்டரி,ஆன்லைன் ரம்மி,கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென மாண்புமிகு அம்மா அவர்களும் அம்மா அரசும் தடை செய்ததோ அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன. கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்?கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....