Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மதுபான, சாராய கொள்கையில் புதுச்சேரி மாநில பாஜகவின் நிலைப்பாடு என்ன? அதிமுக வையாபுரி மணிகண்டன்

    மதுபான, சாராய கொள்கையில் புதுச்சேரி மாநில பாஜகவின் நிலைப்பாடு என்ன? அதிமுக வையாபுரி மணிகண்டன்

    புதுச்சேரியில் மதுபான கொள்கையில் பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அதிமுக வையாபுரி மணிகண்டன் பாஜக தலைவரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் சாமிநாதனை சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில்,

    புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாரதீயஜனதா, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. மக்கள் விரோத திமுக, காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டும் என எண்ணத்துடன் இந்த கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் மாபெரும் ஆதரவை அளித்து வெற்றி பெறச்செய்தனர். என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளை நெருங்க உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்ஆர்.காங்கிரஸ் அரசும், கூட்டணியின் முதலமைச்சரும் மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இத்தகைய சூழலில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு, கூடுதலாக மேலும் 10 மதுபான , சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்கப்படுகிறது. என்ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் sj சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுச்சேரியில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.

    இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுச்சேரி மாநில பாஜக நிலைப்பாடு என்ன? தேசியளவில் பாஜகவின் கொள்கை மதுபானத்தை முற்றிலுமாக ஒழிப்பதுதான். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பாஜகவின் தேசிய கொள்கை. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

    ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுச்சேரி மாநில பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் 14 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....