Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. பொருளாதார நிலை சீராகும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிகம் உழைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலகத்தில் சற்று கவனமாக நடந்து கொள்வது அவசியம். உங்கள் முயற்சி கைகொடுக்கும் நாட்களாக உள்ளன. 

    ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சகிப்பு தன்மையுடன் கடக்க வேண்டிய நாட்களாக உள்ளன. மிகுந்த கவனமுடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது. குறிக்கோளை நிர்ணயித்து வெற்றிகான பாதையை உருவாக்கும் நாட்களாக உள்ளன. குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

    மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. உங்களின் தன்னம்பிக்கையால் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆன்மிக வழிபாடு உங்களை இன்னும் நல்வழிப்படுத்தும். பண வரவு போதுமானதாக இருக்கும்.

    கடகம்: கடக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாட்களாக உள்ளன. ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

    சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு முயற்சியை அதிகரிக்க கூடிய நாட்களாக உள்ளன. கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிப்பதால் சோர்வும் அமைதி இன்மையும் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுடன் அனுசரணையாக இருப்பார்கள்.

    கன்னி: கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக உள்ளன. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். போதுமான பணவரவு கிடைக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....