Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: துலாம் ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு முயற்சி மூலம் வெற்றி காண வேண்டிய நாட்களாக உள்ளன. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதில் சற்று சிரமம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். 

    விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்க கூடிய நாட்களாக உள்ளன. நம்பிக்கையும் நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. திருமண பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும்.  

    தனுசு: தனுசு ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நாட்களாக உள்ளன. அலுவலகத்தில் நீங்கள் எதிர்ப்பார்த்த பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திருமண காரியங்கள் வெற்றிகரமாக முடியும். நீங்கள் உங்கள் வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்துவது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலைத் தொடங்க நல்ல நேரம். 

    மகரம்: மகர ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய சவாலான நாட்களாக உள்ளன. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை ஓரளவு சுமாராக இருக்கும். வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    கும்பம்: கும்ப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு சிந்தித்து செய்லபடக் கூடிய நாட்களாக உள்ளன. அலுவலக பணிகளில் சற்று கூடுதல் கவனமுடன் இருப்பது அவசியம். சக ஊழியர்களிடையே அனுசரணையுடன் இருப்பது நன்மையை உண்டாக்கும். அதிகாரிகள் கடிந்து கொண்டாலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழிலில் போதுமான வரவு இருக்கும்.

    மீனம்: மீன ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஆன்மிக வழிபாடு மூலம் அமைதி காண வேண்டிய நாட்களாக உள்ளன. நீங்கள் நினைத்த நேரத்தில் உங்கள் செயல்களை முடித்து காட்டுவீர்கள். சில பிரச்சனைகள் தோன்றி மறைவதின் மூலம் தெளிவான வழி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். தொழிலில் முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....