Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்என்னம்மா வித்த காட்றானுங்க பாருங்க! தண்ணீரில் மூழ்காமல் வாக்கிங் போன பல்லி!

    என்னம்மா வித்த காட்றானுங்க பாருங்க! தண்ணீரில் மூழ்காமல் வாக்கிங் போன பல்லி!

    தண்ணீரில் மூழ்காமல் பல்லி நடந்தவாறு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. நிறம், வடிவம், செயல், இருப்பிடம் என அணைத்து வகையிலும் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருக்கிறது. சில விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் அவற்றில் தெரியாத பல செய்திகள் நமக்கு சுவாரஸ்யமானதாக மாறிவிடுகிறது. 

    அந்த வகையில், ஊர்வன இனத்தை சேர்ந்த பசிலிஸ்க் என்ற பல்லி தண்ணீரில் நடக்கும் காட்சிகள் ஆச்சர்ய அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தக் காணொளி காட்சியை ஐபிஎஸ் அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்தப் பல்லி நீர்நிலையில் நடுவில் உள்ள கிளை ஒன்றில் இருந்து தண்ணீரில் குதிக்கிறது. பிறகு, தண்ணீரில் மூழ்காமல் வேகமாக அடுத்த கரை பக்கம் செல்கிறது. இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    இந்தக் காணொளியில் சுசாந்த நந்தா, நீர் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் சமயம் உருவாகும் மேற்பரப்பு இழுவிசையின் காரணமாக சிறிய விலங்குகள் தண்ணீரில் மூழ்காமல் நடக்க முடிவதாக விளக்கம் அளித்துள்ளார். 

    அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடும் திமுக- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....