Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடும் திமுக- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடும் திமுக- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் எந்த ஒரு நன்மையையும் கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

    தமிழக அரசு கோவையை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

    இந்தப் போராட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 

    அப்போது அவர், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்ததாகவும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு தான் என்றும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு மட்டும் அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் அதிமுக ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

    அதிமுக அரசு கொண்டு திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடுவதாகவும், அதிமுக கொண்டு வந்த கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறினார். திமுக அடச்சியில் கோவைக்கு மட்டுமில்லை; தமிழகத்திற்கே எந்த ஒரு நன்மையையும் கிடைக்கவில்லை என கூறிய எடப்பாடி, 18 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம்  ஒவ்வொன்றாக திமுக அரசு கைவிடுவதாகவும், ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சான்று என்றும் குற்றம் சாட்டினார்.

    50 ஆயிரம் பேர் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா; நம்ம ஊர்ல எங்க நடக்கப்போகிறது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....