Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்50 ஆயிரம் பேர் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா; நம்ம ஊர்ல எங்க நடக்கப்போகிறது தெரியுமா?

    50 ஆயிரம் பேர் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா; நம்ம ஊர்ல எங்க நடக்கப்போகிறது தெரியுமா?

    பொள்ளாட்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 10 பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன.

    இதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகை தருவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    ஜனவரி 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைப்பெறும் திருவிழாவில் தினசரி, காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பலூன்கள் பறக்கவிடப்படும் என்றும், சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பனி வந்துடுச்சு மழை வராது புராணத்த தூக்கி போடுங்க..! தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் மழைச் செய்தி என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....