Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவாடகைக்கு பாய் பிரண்டு வேண்டுமா? பெண்களுக்கான புதிய செயலி அறிமுகம்

    வாடகைக்கு பாய் பிரண்டு வேண்டுமா? பெண்களுக்கான புதிய செயலி அறிமுகம்

    பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கப்படும் டாய் பாய் எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    தனியாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால், நாம் முதலில் தேடுவது நிச்சயம் நண்பர்களைத்தான். அவர்களுடன் வெளியே சென்று  விட்டு வந்தால், நாம் ஒரு அளவு லேசாக உணர்வோம்.

    யார் என்று தெரியாத நபரிடம் நாம் பேசவே யோசிப்போம். அப்படி இருக்கும் பட்சத்தில், முகம் தெரியாத நபரிடம் நமது பிரச்சனைகளை சொன்னால் மன அழுத்தம் குறையுமா?

    ஆனால், அப்படி குறைகிறது என்ற வகையில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  

    தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் பாய் பிரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றால் நம்ப முடியுமா? 

    ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் எனப்படும் செயலி திறக்கப்பட்டுள்ளது.

    காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் ஆண் நண்பர்களிடம் பேசுவதற்கு தேவை இருந்தால், இந்த செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், இன்ஸ்டாகிராமின் மூலம் தொடர்பு கொண்டு ‘டாய் பாய்’ இணையதளத்திற்கான ஏபிகே ஃபைலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் இல்லை.

    பெண்களின் மன அழுத்தத்திற்காக இப்படி ஒரு செயலியா? என்பது ஒரு கேள்விதான். இருப்பினும், இது பெண்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வு இப்போது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையும் படிங்க: தனுஷ் செய்த உதவி…நன்றி தெரிவித்த போண்டா மணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....