Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுடக்கப்பட்ட 10 யூடியூப் சேனல்களின் காணொளிகள்-இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா?

    முடக்கப்பட்ட 10 யூடியூப் சேனல்களின் காணொளிகள்-இந்த அதிரடிக்கு காரணம் என்ன தெரியுமா?

    புலனாய்வு அமைப்புகளின் கூற்றின் அடிப்படையில் 10  யூடியூப் சேனல்களில் இருந்து, 45 யூடியூப்  காணொளிகளை முடக்குமாறு யூடியூபிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021- இன் விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தடுப்பதற்கான உத்தரவு செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை முடக்கப்பட்ட காணொளிகள் 1.30 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இருக்கிறது.

    இவை மத ரீதியாக வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பகிரப்பட்டுள்ள போலி செய்திகள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட காணொளிகள் ஆகும்.

    தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தடுக்கப்பட்ட சில காணொளிகள் அக்னிபத் திட்டம், இந்திய ஆயுதப்படைகள், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு அமைப்பு, காஷ்மீர் போன்றவற்றில் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது மாதிரியான காணொளிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் படைத்தது என கண்டறியப்பட்டிருக்கிறது.

    இது மட்டும் இன்றி, சில காணொளிகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இடையே இந்தியாவின் வெளிப்புற எல்லையை தவறாக சித்தரித்துள்ளன. இதன் காரணமாக அமைச்சகத்தால் முடக்கப்பட்ட காணொளிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு, நாட்டில் பொது ஒழுங்கு ஆகியவற்றுகு தீங்க விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவற்றை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: முன்னேறிய இந்திய அணி…சத்தமில்லாமல் ஒரு சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....