Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறுக்கே வந்த பறவை: பழுதடைந்த பறக்கும் விமானம்

    குறுக்கே வந்த பறவை: பழுதடைந்த பறக்கும் விமானம்

    கோழிக்கோட்டில் இருந்து 135 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து, ஒரு நாள் முன்னதாகவே கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதுகுறித்து, ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளதாவது:

    ஏர் இந்தியா விமானத்திலிருந்து 135 பயணிகளில் சிலர், தங்கள் பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டு இங்கு வேறொரு விமானத்தில் சென்றனர். மேலும், கண்ணூரில் உள்ள உணவகங்களில் தங்கி இருந்த சுமார் 85 பேர் தங்கள் பயணத்தை தொடர மீண்டும் திட்டமிட்டுள்ளனர். 

    அதில், 24 பயணிகள் நேற்று மற்றும் இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் துபாய் மற்றும் பக்ரைனில் உள்ள அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் 61 உள்நாட்டு பயணிகள் இங்கேதான் இருக்கின்றனர். விமானம் சரி செய்யப்பட்டவுடன், அவர்கள் அதே விமானத்தில் தில்லிக்கு அனுப்பப்படுவார்கள்.

    தில்லியில் இருந்து ஏழு பொறியாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் விமானத்தில் பறவை மோதிய இயந்திரங்களை ஆய்வு செய்து சரி செய்து வருகின்றனர். பழுது பார்க்கும் பணி முடிந்ததும், ‘விமானம் பறக்க தகுதியானது’ என்ற சான்று அளிக்கப்பட்ட பின்னரே விமான புறப்படும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: முன்னேறிய இந்திய அணி…சத்தமில்லாமல் ஒரு சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....