Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா57 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக கிடைத்த சிலிண்டர் - திருவிழா நடத்திய ஊர் மக்கள்

    57 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக கிடைத்த சிலிண்டர் – திருவிழா நடத்திய ஊர் மக்கள்

    57 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் விஜயநகர் என்ற கிராமத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் முதல் இந்தியன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கி சுமார் 57 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நாட்டின் பிறப்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் விஜயநகரம் என்ற கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சங்லாங் மாவட்டம் மியோ துணை மண்டலத்தில் இருந்து 15 குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அவ்வூர் மக்கள் திருவிழாவாக இதனை கொண்டாடியுள்ளனர் என்பது அவர்களின் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. .

    இந்த ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பதாக அமைச்சர் கம்லங் மோசாங் கூறியுள்ளார். அந்த ஊர் மக்கள் இதுவரை விறகுகளை வைத்து, அடுப்பில் தான் சமைத்து வந்திருக்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இந்தப் பகுதி மக்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களது ஆவணங்கள் உரிய அதிகாரிகளை சென்றடையவே பல நாட்களாகும். மேலும், ஒரு வங்கி பரிமாற்றத்துக்கு கூட இங்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டி நிலை இருக்கிறது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு பிஎஸ்என்எல்(bsnl) வசதி வந்திருந்தாலும், ஒருவர் தொலைபேசியில் அழைக்கவும் நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: உலக பிரசித்தி பெற்ற ‘குலசை தசரா திருவிழா’ கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....