Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்மதுக்கடைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; அரசை கண்டித்து போராட்ட களத்தில் குதித்த பொதுமக்கள்

    மதுக்கடைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; அரசை கண்டித்து போராட்ட களத்தில் குதித்த பொதுமக்கள்

    புதுச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட கோரி கூட்டணி கட்சி பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மதுக்கடை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இதே போல் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை அரசு செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மதுகடையை மூட கோரி மதுக்கடை அருகே ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு பகுதிகளில் மதுக்கடை திறக்க எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உழவர்கரை பகுதியில் ஆளும் கூட்டணி அரசின் பாஜக ஆதரவு சுயேட்சை எம.எல்.ஏ  அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பேத்கருக்கு காவி சட்டை சர்ச்சை..! அர்ஜூன் சம்பத் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....