Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைநீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..

    நீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா இணைந்து நடித்து, இளையராஜா இசையில் வெளிவந்த திரைப்படம்தான், நீதானே என் பொன்வசந்தம்! நாம் ஒவ்வொரு வயதை எட்டும்போதும் நம் காதல் சார்ந்த பார்வை மாறும், மாறக்கூடும். இப்படியான மாறுதல் நிகழும்போது நாம் நம் காதலை எப்படியாக பார்க்கிறோம், எப்படியாக கையாள்கிறோம் என்பதை இப்படம் அணுகியிருக்கும் விதம் சிறப்பான ஒன்று.

    பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்தது எப்படி …

    nep

    சின்னஞ்சிறு வயதில் நம்முடன் விளையாட, பலர் இருந்தாலும் நம் மனம் குறிப்பிட்ட சிலரைத்தான் தேடும். அந்த சிலர்தான் நமக்கு எல்லாமுமாய் தோன்றுவார்கள். நம் அன்றாடம், அவர்கள் இல்லாமல் பூர்த்தியாகாது. நம்மை பொறுத்தவரை அந்த வயதில் அது ஒரு தோழமை. அத்தோழமையை சில நிமிடங்களில் நம்மை உணரும்படி செய்திருக்கும் இத்திரைப்படம். அதற்கு இளையராஜாவின் பங்கு மிக முக்கியமானது. தோழமை நம்மை விட்டு நீங்குகிறது என்று அறிந்தப்பின் அழுகைத் ஊற்றெடுக்கும். அந்த ஊற்று நீதானே என் பொன்வசந்தத்திலும் நிகழும். 

    பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோன்றுது 

    மீண்டும் பேசி இணையுது ..

    பின்பு டினேஜ் பருவம், இப்பருவத்தில் நாம் யார் என்பது நமக்கே அவ்வபோது கேள்வியாக எழும். தோழமையாய் இருந்த ஒருவரை மீண்டும் இந்த பருவத்தில் பார்த்தலும் அவர்களின் மீது காதல் வயப்படுவதும் இயல்பான ஒன்றுதான். காதல் வயப்படுவது வரை எளிதுதான். ஆனால் அதை நாம் உணர்ந்தது இதுதான் என நாம் அறிய , உணர்ந்ததை வெளிப்படுத்த, வெளிபடுத்திய பின் நேர்பவைகளில் மூழ்கிப்போதல் என பலவும் நிகழும் பருவமாய், டினேஜ் இருக்கும்.

    varun nithya

    வருணும் நித்யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்க, நாம் நம்மை அறியாமல் புன்னகைக்க தொடங்கி இருந்தோம். வருணை நோக்கி நித்யா வீசும் காதலில், நித்யா போன்ற பெண்ணை பலரும் நிஜத்தில் தேட தொடங்கினர். அன்பில் முட்டாள்தனமாய் இருங்கள் ஏனென்றால் அந்த அன்பில்தான் எல்லாம் அடங்கியுள்ளது என்ற ரூமியின் வரிக்கு ஏற்ப வருணுக்கும் நித்யாவுக்கும்  நிகழ்ந்து கொண்டிருக்கும் காதலில், தலைக்கணம் மற்றும் பொசசிவ் அளவுக்கு மீறி எட்டிப்பார்க்க காதல் முறிகிறது, பிரவு நேர்கிறது. 

    முன் ஜென்மம் போனாலே – அங்கே 

    நீயும் நானும் நாம்!

    முறிந்ததாய் நினைத்த காதல், பிரிந்ததாய் நாம் அறிந்த காதல் மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும் பருவமாய் வருணுக்கும் நித்யாவுக்கும் அமைந்ததுதான் கல்லூரி வாழ்வு! காதலின் பித்தில் வருணும் நித்யாவும் திளைத்து இருப்பதை நம்மால் நன்கு உணர முடியும். கூடலைக் காட்டிலும் அவர்களுக்கு இடைய நிகழும் உரையாடலில் அவர்களின் காதலின் நெருக்கத்தை நாம் காணலாம், உணரலாம். நித்யா அயலூருக்கு செல்வதற்கு முன் வருணும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் காதலின் மழை. 

    nep

    வருண் அற்ற நித்யாவை நம்மால் யூகிக்க முடியும் ஆனால் நித்யா அற்ற வருணை அவ்வளவு இயல்பாக யூகித்து விட முடியாது. இந்த பிரிவில் நாம் நித்யா அற்ற வருணை காண நேரும். அதே சமயத்தில் வருணிற்கு அவனது வீட்டு வாழ்வு புரியத்தொடங்கும். 

    இப்புரிதலின் பின், வருணுக்கும் நித்யாவுக்குமான புரிதலில் கேள்விகள் தொடங்கும். இருவர் பக்கமும் நியாயங்கள் தென்பட, ‘புரிதல் இருந்திருக்கலாம்’ என்ற விடை மட்டுமே மிஞ்சும். மீண்டும் முறிவு ஏற்பட வருண் நித்யாவின் காதல் கதை முற்றுப்புள்ளி பெற்றது. ஆனால் நமக்கு தெரியும் முற்றுப்புள்ளிக்குப் பின் ஒரு புள்ளி வைத்து, காதலை மீட்டுருவாக்கம் செய்வார்களென்று. ஆனால் யார் இதை தொடங்குவார் என்ற கேள்வி அப்போது நமக்கு மிஞ்சும்!

    சுற்றும் பூமி நிற்க சொன்னேன், உன்னை தேடி பார்க்க சொன்னேன் என்னை பற்றி கேட்க சொன்னேன், என் காதல் நலமா என்று…

    nep

    மிஞ்சிய கேள்விக்கு பதிலாய் வருண் மீட்டுருவாக்கம் செய்யப் புறப்படுவான். . எப்போதும் வருணை பார்த்தவுடன், வருணை நோக்கி வரும் நித்யா இம்முறை வேறு திசைப்பக்கம் சென்று அழுகையை மேற்கொள்ள, மாற்றங்கள் தெரியும். நித்யாவிற்காக வருண் எழுதிய இமெயில்ளில் காதலின் நெடி அதிகமே இருக்கும். நித்யாவுக்கு அது தெரிந்தாலும் ஏற்கமாட்டாள். என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று சொல்லும் வருண், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பெண்கள் என்றால் பொய்தானா என நித்யாவை விட்டு கிளம்பிவிடுவான். 

    அன்பில் செய்த ஆயுதங்கள் மண்ணில் உண்டு ஏராளம்… 

    வருண் நித்யாவை விட்டு வேறுப் பெண்ணை கல்யாணம் செய்ய முடிவு செய்திருப்பான். பின் நித்யா வருணைத் தேடி செல்ல, அங்கு காதல் மீண்டும் கைகூடும் விதம், கைகூடும் முன் நிகழும் உரையாடல்களில் காதல் வந்து வந்து செல்வதெல்லாம் அன்பின் ஒளியே. 

    nep

    “இனிமே என் வாழ்க்கைல நீ இல்லனு நினைச்ச, ஆனா நீ வந்த ஒரு செகண்ட்லேயே உன்கிட்ட ஓடி வரணும்னு தோணுச்சி” இதுதான் நீதானே என் பொன்வசந்தத்தின் அடிநாதம். வருண் நித்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டவை கிளைமாக்ஸில் வெளிப்படும் விதம், ஊடலுக்கு பின்னான அன்பின் நிலத்துக்கு சொந்தமானவை!

    அன்பின் நிலத்திற்கு சொந்தமான நித்யாவும், வருணும் நமக்கு அறிமுகமாகி பத்து வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

    முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…மிரட்டிய ஷ்ரேயா கோஷல்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....