Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்து கோயில் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்.. இந்திய தூதரகம் கடும் கண்டனம்

    இந்து கோயில் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்.. இந்திய தூதரகம் கடும் கண்டனம்

    இங்கிலாந்தில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தபட்டதற்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து கோயிலுக்கு வெளியே இருந்த கொடியை எதிர் தரப்பினர் அகற்றியது தொடர்பாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக லெய்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    மேலும், இந்தக் கலவரத்தில் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

    இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில், இஸ்லாமிய  நபர்கள் இந்து கோயிலை தாக்குவது போலவும், இந்து அமைப்பினர் ஜெய் ராம் கோஷத்துடன் இஸ்லாமியர்களின் பொருள்களை சேதப்படுத்துவதாகவும் காணப்படுகிறது. 

    பிறகு, இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறை பேச்சு வார்த்தை மேற்கொண்டதாக தெரிகிறது. மேலும், வடக்கு லெய்செஸ்டர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக லெய்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    இதனைத்தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்து கோயில் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து இந்திய தூரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

    இந்த சம்பவம் குறித்து, நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடுமையான முறையில் எடுத்துரைத்துள்ளோம். இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதே லெய்செஸ்டர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியையொட்டி ஏற்பட்ட மோதல் குறித்த காணொலிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....