Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட ஹிட் நடிகை - கேப்டன் மில்லர் அப்டேட்

    தனுஷுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட ஹிட் நடிகை – கேப்டன் மில்லர் அப்டேட்

    தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் இம்மாதம் வெளிவர இருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 

    இந்நிலையில், தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 

    ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்தான் தனுஷ் நடிக்கவிருக்கிறார். தனுஷின் இத்திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாக உள்ளது. 

    இந்நிலையில், சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படக்குழு திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இத்திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, சில்லுக்கருப்பட்டி திரைப்பட புகழ் நிவேதிதா சதிஷூம் இத்திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....