Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநண்பன் பட பாணியில் நடைபெற்ற பிரசவம்; அதிரடி மாற்றத்தை அறிவித்த மா.சுப்பிரமணியம்

    நண்பன் பட பாணியில் நடைபெற்ற பிரசவம்; அதிரடி மாற்றத்தை அறிவித்த மா.சுப்பிரமணியம்

    செங்கல்பட்டு அருகே காணொளி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பரவிவரும் H1N1 என்ற ஃபுளு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஏற்கனவே பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தக் காய்ச்சலால் 294 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் அரசுமருத்துவமனையிலும் 53 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மட்டும் 100 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

    இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை இறந்து பிறந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ தேதி நெருங்கியதால் குழந்தை தலைகீழாக இருந்தது. இதனால், ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவர்களின் அறிவுறுத்தலால், அப்பெண் ஸ்கேன் செய்துவிட்டு அதனை  பெற்றுக்கொள்ளாமல் தனது உறவினரின் இறுதி சடங்கிற்காக சென்றுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து பிரசவத்திற்காக வந்துள்ளார். 

    அப்போது பணியில் மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர் வைத்து காணொளி காட்சி மூலமாக அந்தப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் .  இதில் தாய் மட்டும் உயிர்ப் பிழைத்துள்ளார். அந்தக் குழந்தை இறந்து பிறந்தது. 

    இதன்காரணமாக, பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் காணொளி மூலமாக பிரசவம் பார்த்த செவிலியர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....