Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகழிவறையில் சமைக்கப்பட்ட உணவு.. கபடி வீரர்களுக்கு நடந்த அவலம் - வைரல் வீடியோ

    கழிவறையில் சமைக்கப்பட்ட உணவு.. கபடி வீரர்களுக்கு நடந்த அவலம் – வைரல் வீடியோ

    உத்தர பிரதேசத்தில் கழிவறையில் சமைக்கப்பட்ட உணவை கபடி வீரர்களுக்கு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் உள்ள மருத்துவர் பீம்ராவ் விளையாட்டு அரங்கத்தில் 17 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவினருக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன. அப்போது கழிவறை தரையில் சமைக்கப்பட்ட உணவு, கபடி வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தக் காணொளி குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பல நிகழ்ச்சிகளுக்கு பாஜக அரசு கோடிக் கணக்கில் செலவிடுகிறது. ஆனால், கபடி வீராங்கனைகளுக்கு முறையான ஏற்பாட்டை செய்ய பணம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இது குறித்து டிஆர்எஸ் கட்சி ட்விட்டரில், ‘உத்தர பிரதேசத்தில் கழிவறையில் வைக்கப்பட்ட உணவு கபடி வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீராங்கனைகளை பா.ஜ.க மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு’ என தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை, உத்தர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்தது. இதுகுறித்து அதிகாரி அனிமேஷ் சக்சேனா, ‘மழை பெய்த காரணத்தால், நீச்சல் குளம் பகுதிக்கு அருகே உணவு சமைக்க ஏற்பாடு செய்தோம். விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிகள் நடந்ததால், இட நெருக்கடி காரணமாக உணவு பொருள்கள் நீச்சல் குளத்துக்கு அருகே உள்ள உடைமாற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், ‘தவறு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வந்தது, கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்…ஐசிசி சொல்வது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....