Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவந்தது, கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்...ஐசிசி சொல்வது என்ன?

    வந்தது, கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள்…ஐசிசி சொல்வது என்ன?

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, அதில் சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன அவையாவன; 

    • பந்துவீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது ஃபீல்டர் வேண்டுமென்றே நகர்ந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும்.
    • பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பு, நடுவர் அருகே உள்ள பேட்டர் கிரீஸை விட்டு நகர்ந்தால் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். அதுபோன்று ஆட்டமிழக்கச் செய்வது இனிமேல் ரன் அவுட் என அழைக்கப்படும்.
    • பந்துவீசும் முன்பு ஒரு பேட்டர் முன்னேறி வந்து அடிக்க வருவதைக் கவனித்து விட்டால், அந்த பேட்டரை பந்துவீச்சாளர் இதற்கு முன்பு ரன் அவுட் செய்ய முடியும். இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. பந்துவீசும் நடவடிக்கையை முழுவதுமாக முடிக்காமல் பந்தை பேட்டர் பக்கம் த்ரோ செய்யக் கூடாது.

    இதையும் படிங்க: இவங்க மட்டும் தான் ஹீரோவா? ரசிகர்களின் செயலினால் கோலி, தோனி மீது கம்பீர் பாய்ச்சல்

    • இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஓவர்கள் வீச ஓர் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும்.
    • கொரோனா பரவலைத் தடுக்க எச்சிலைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடரவுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்த விதிமுறை அமலுக்கு வரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....