Sunday, April 28, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகால்நடை மருத்துவ விண்ணப்பம்; நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்...எதுவரை தெரியுமா?

    கால்நடை மருத்துவ விண்ணப்பம்; நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்…எதுவரை தெரியுமா?

    இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளும், நான்கு ஆண்டு படிப்புகளும் உள்ளன. 

    இந்த படிப்புகளுக்கு பிளஸ்  2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

    பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 – 23 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் கடந்த செப்டம்பர்-12 ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 – 23 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

    மேலும், www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு; புடினின் அணுகுண்டு பேச்சு தான் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....