Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு; புடினின் அணுகுண்டு பேச்சு தான் காரணமா?

    இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு; புடினின் அணுகுண்டு பேச்சு தான் காரணமா?

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.

    இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து 80.86 ரூபாயாக சரிந்தது. 

    அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பினை அடுத்து இந்திய ரூபாய் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது. 

    நேற்றைய பங்குச் சந்தையின் துவக்கத்தில் 80 ரூபாய் 27 காசுகளாக இருந்த மதிப்பு, நாள் இடையே 80 ரூபாய் 95 காசுகள் என்ற அளவுக்கு சரிவைக் கண்டு, இறுதி கட்டத்தில் 80 ரூபாய் 86 காசுகள் என்ற மதிப்பில் நிலைபெற்றது.

    இதையும் படிங்க: 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ”கின்னஸ் சாதனை” படைத்த ஜான் சீனா !

    அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்றைய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் பெரிய ஏற்றமில்லாதது ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    அமெரிக்க மத்திய வங்கி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இந்த அமெரிக்க மத்திய வங்கியை அடுத்து பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டியை உயர்த்தி உள்ள நிலையில், பேங்க் ஆப் ஜப்பானும் வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, இந்த வட்டி விகிதத்திற்கு ரஷிய அதிபர் புடினின் பேச்சு தான் காரணம் என பல பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....