Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதோவாளை மலர் சந்தையில் மூன்று மடங்கு உயர்ந்த ரோஜா பூக்களின் விலை

    தோவாளை மலர் சந்தையில் மூன்று மடங்கு உயர்ந்த ரோஜா பூக்களின் விலை

    காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.     

    உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. 

    அதன்படி தமிழகத்தின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதிலும் ரோஜா பூக்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. காதலர் தினத்தில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை கூடியுள்ளது. 

    கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஒரு கட்டு ரோஜா 120 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

    இங்கு விற்பனை ஆகும் ரோஜா பூக்களை கேரளா மற்றும் பல ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதே சமயம், ஒரு கிலோ பிச்சிப்பூ ஆயிரம் ரூபாய்க்கும் மல்லிகை பூ 700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

    மத்திய பிரதேசத்தில் சூறையாடப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....