Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம்- கமல்ஹாசன்

    அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம்- கமல்ஹாசன்

    ‘உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    காதலர் தினம் வருவதற்கு 7 நாட்களுக்கு முன்பில் இருந்தே காதலர் தினத்துக்கான கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அன்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் அனைவரும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என  தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்’ என பதிவிட்டுள்ளார்.

    பூச்செண்டாய் மனித மனங்கள் நிறைய காதல் அவசியம்தானே?! – காதலர் தின ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....